163 ஆம் இலக்க தனியார் பஸ்கள் பணிப்பகிஷ்கரிப்பு

163 ஆம் இலக்க வீதியில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 12-02-2019 | 4:37 PM
Colombo (News 1st) 163 ஆம் இலக்க வீதியில் தெஹிவளை - பத்தரமுல்லைக்கிடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர். மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் வழங்கப்பட்டுள்ள சுதந்திர பயண அனுமதிப்பத்திரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.