வடக்கு - கிழக்கை இணைக்கும் கொக்கிளாய் பாலம்

வடக்கு - கிழக்கை இணைக்கும் கொக்கிளாய் பாலம்: செக் குடியரசின் ஏற்றுமதி வங்கி கடனுதவி

by Staff Writer 12-02-2019 | 4:27 PM
Colombo (News 1st) வட மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் வகையில் கொக்கிளாய் பாலம் அமைக்கப்படவுள்ளது. முல்லைத்தீவு - திருகோணமலை, புல்மோட்டையை இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு 9 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இதற்கான 41. 5 மில்லியன் யூரோ கடனுதவியை செக் குடியரசின் ஏற்றுமதி வங்கி வழங்கவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 1 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்படவுள்ள இந்த கொக்கிளாய் பாலத்தினூடாக முல்லைத்தீவிற்கும் திருகோணமலைக்கும் இடையிலான தூரத்தை 100 மீட்டர் வரை குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக மீள்குடியேற்ற அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.