வடக்கின் நீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்

by Staff Writer 12-02-2019 | 8:08 PM
Colombo (News 1st) வடக்கின் நீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வட மாகாணத்திற்கான உத்தேச நீர் விநியோகத் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரை உரியவாறு வழங்கினால், வடக்கின் ஏனைய அபிவிருத்தி பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் களுத்துறை பகுதிகளில் வௌ்ளத்தின்போது கடலுடன் கலக்கும் நீரை குழாய் மூலம் வடக்கிற்குக் கொண்டு செல்வதற்கு இதற்கு முன்னர் தாம் முன்வைத்த யோசனையை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியில் 2020ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ள ''யாழ்ப்பாணத்திற்கு நீர்'' செயற்றிட்டம் தொடர்பாகவும், வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான ''எல்லங்கா'' குளக் கட்டமைப்பு அபிவிருத்தி செயற்றிட்டத்தின் முன்னேற்றம் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்