சென்னையைத் தாக்கிய 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

சென்னையைத் தாக்கிய 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

by Chandrasekaram Chandravadani 12-02-2019 | 10:45 AM
Colombo (News 1st) சென்னையிலிருந்து வட கிழக்கே 600 கிலோமீற்றர் தொலைவில், 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக, இந்திய புவியியல் ஆய்வை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இன்று அதிகாலை வேளையில் சென்னையின் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக, சமூக வலைத்தளங்களில் பலர் பதிவிட்டுள்ளனர். நிலநடுக்கம் காரணமாக எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.