சமுத்திர குற்றச்செயல்களை சுற்றிவளைக்க விசேட குழு

சமுத்திர சூழலில் இடம்பெறும் குற்றச்செயல்களை சுற்றிவளைக்க விசேட குழு நியமனம்

by Staff Writer 12-02-2019 | 4:48 PM
Colombo (News 1st) சமுத்திர சூழலில் இடம்பெறும் குற்றச்செயல்களை சுற்றிவளைப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை சுற்றிவளைப்பதற்காக இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண தெரிவித்தார். இந்த குழுவில் கடற்படை உளவுப்பிரிவு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கடற்றொழில் திணைக்களம் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் அடங்குகின்றனர். இதேவேளை, மீன்பிடிப் படகு விற்பனை மற்றும் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை மாவட்ட அலுவலகத்தினூடாக முன்னெடுப்பதைக் கைவிட கடற்றொழில் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. விற்பனை மற்றும் ஒப்படைக்கும் நடவடிக்கைகளை தலைமை காரியாலயத்தினூடாக முன்னெடுக்க முடியும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.