கல்வியியல் கல்லூரிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பம்

கல்வியியல் கல்லூரிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம்

by Staff Writer 12-02-2019 | 12:07 PM
Colombo (News 1st) கல்வியியல் கல்லூரிகளுக்குப் பதிவுசெய்வதற்காக தபால் மூலம் விண்ணப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இணையத்தளத்தினூடாக விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும், மாணவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கலை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, கல்வியியல் கல்லூரிகளுக்கான ஆணையாளர் நாயகம் கே.எம்.எச். பண்டார குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இணையத்தளத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு மாத்திரமே இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும் எனக் கூறிய கல்வியியல் கல்லூரிகளுக்கான ஆணையாளர் நாயகம், 27 கற்கை நெறிகளுக்காக சுமார் 8,000 மாணவர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு கிடைக்கும் விண்ணப்பங்களில் தெரிவுசெய்யும் மாணவர்களுக்கான கற்கைநெறி எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வியியல் கல்லூரிகளுக்கான ஆணையாளர் நாயகம் கே.எம்.எச். பண்டார இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.