வானொலி அரச விருது வழங்கல் விழாவில் விருதுகளைக் குவித்த சக்தி FM

வானொலி அரச விருது வழங்கல் விழாவில் விருதுகளைக் குவித்த சக்தி FM

வானொலி அரச விருது வழங்கல் விழாவில் விருதுகளைக் குவித்த சக்தி FM

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2019 | 8:31 pm

Colombo (News 1st) வானொலி அரச விருது விழாவில் சக்தி.எவ்.எம்., மற்றும் நியூஸ்பெர்ஸ்ட் 11 விருதுகளை சுவீகரித்துள்ளன.

2019 – வானொலி அரச விருது விழா கொழும்பு தாமரைத் தடாகம் கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

வீடமைப்பு மற்றும் கலாசார விவகார அமைச்சர் சஜித பிரேமதாச தலைமையில் இந்த விருது வழங்கல் விழா நடைபெற்றது.

இதன்போது,

* சிறந்த செய்தி ஆசிரியருக்கான விருது – சக்தி எப்.எம்., நியூஸ்பெர்ஸ்ட்டின் இராசலிங்கம் ரவிரகு

 

* சிறந்த வானொலி நாடக பிரதியாளர் விருது – சக்தி எப்.எம். அலைவரிசை பிரதானி ஆர்.பி. அபர்ணாசுதன்

* சிறந்த வானொலி வினாவிடை நிகழ்ச்சிக்கான விருது – ஞானகுமாரன் கணாதீபன்

* சிறந்த வானொலி ஆவணப்படுத்தல் நிகழ்ச்சிக்கான விருது – சக்தி எப்.எம். இன் முகாமையாளர் ஞானகுமாரன் கணாதீபன்

* சிறந்த ஆரம்ப விளம்பர குறியிசைக்கான விருது – சக்தி எப்.எம். இன் இசைக்கட்டுப்பாட்டாளர் கனகராசா மயூரன்

* சிறந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் விருது – ஆரணி பரமசாமி

* ஆண்டின் சிறந்த பெண் அறிவிப்பாளர் விருது – வனிதா பரமேஸ்வரன்

* சிறந்த வானொலி சஞ்சிகை நிகழ்ச்சி ஜுரி விசேட விருது – வனிதா பரமேஸ்வரன்

* சிறந்த வானொலி நடிகருக்கான விருது – பாக்கியராஜா கீர்த்தனன்

* சிறந்த வானொலி நாடக தயாரிப்பாளர் விருது – சக்தி எப்.எம் தயாரிப்பு உதவி முகாமையாளர் வேள் பிரஜீவ்

ஆகியோருக்குக் கிடைத்தன.

இதேவேளை,

* சிறந்த சிங்கள புலனாய்வு செய்தி அறிக்கையிடலுக்கான விருது -நியூஸ்பெர்ஸ்ட்டின் சுரேன் சஞ்சய பெரேரா

”ஜனதா ஹண்ட” தொகுப்பிற்காகவே நியூஸ்பெஸ்டின் சுரேன் சஞ்சய பெரேரா இந்த விருதுக்குப் பாத்திரமானார்.

இந்தநிலையில், வாழ்நாளில் ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் ‘பிரதீபா பிரணாம விருது’ கலாநிதி அருந்ததி ஶ்ரீறங்கநாதனுக்கு வழங்கப்பட்டது.

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்