லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2019 | 7:34 am

Colombo (News 1st) எரிபொருளின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டமைக்கு இணங்க, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

அதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவினாலும் ஒட்டோ டீசலின் ஒரு லீற்றரின் விலை 4 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 8 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையில் மாற்றம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

புதிய விலைச் சூத்திரத்திற்கு அமைய, நேற்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்