மஹிந்த ராஜபக்ஸ திருப்பதி கோவிலில் வழிபாடு

மஹிந்த ராஜபக்ஸ திருப்பதி கோவிலில் வழிபாடு

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2019 | 8:15 pm

Colombo (News 1st) இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இன்று காலை திருப்பதி கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினர் பெங்களூரிலிருந்து நேற்று (11) மாலை விசேட விமானத்தினூடாக திருப்பதியை சென்றடைந்ததாக நியூஸ்ஃபெஸ்ட்டின் இராமேஸ்வரம் செய்தியாளர் தெரிவித்தார்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு இன்று அதிகாலை சென்ற எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட குழுவினர் விசேட பூஜைகளில் கலந்துகொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் திருப்பதி விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக
இராமேஸ்வரம் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்