பாடகர் அமல் பெரேரா, நதீமால் பெரேரா தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு

பாடகர் அமல் பெரேரா, நதீமால் பெரேரா தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு

பாடகர் அமல் பெரேரா, நதீமால் பெரேரா தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2019 | 7:00 am

Colombo (News 1st) போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைதான பிரபல பாடகரான அமல் பெரேரா மற்றும் நதீமால் பெரேரா தொடர்பில் துபாய் பொலிஸாரிடம் இன்று அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

துபாயிலுள்ள சட்டத்தரணிகளின் உதவிகளைப் பெற்று இன்று முற்பகல் அந்நாட்டு பொலிஸாரிடம் அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, துபாயில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் பாதால உலகக் கோஷ்டியின் தலைவர்களில் ஒருவரான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் அந்நாட்டு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

எனினும், சந்தேகநபர்களை துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான திகதி தொடர்பில் இதுவரை தகவல்கள் வௌியாகவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்