திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான வழக்கை துரிதமாக்க இருதரப்பினரும் இணக்கம்

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான வழக்கை துரிதமாக்க இருதரப்பினரும் இணக்கம்

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிரான வழக்கை துரிதமாக்க இருதரப்பினரும் இணக்கம்

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2019 | 1:32 pm

Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கைத் துரிதமாக்குவதற்கு இரு தரப்பினரும் இணங்கியுள்ளதாக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (12) அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கையொப்பமிட்டதாகத் தெரிவிக்கப்படும் அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு வௌியிட்டு இனவாதத்தைத் தூண்டுவதற்கு முயற்சித்தமை தொடர்பில் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரதிவாதி மீதான குற்றப்பத்திரத்தை மீளப் பெறுவதற்கு முறைப்பாட்டாளர் சார்பில் சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பிரதி சொலிஷ்ட்டர் ஜனரல் திலிப் பீரிஸ் மன்றுக்கு அறிவித்துள்ளார்.

குறித்த வழக்கை நிறைவுசெய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்