திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

திங்கட்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

12 Feb, 2019 | 6:08 am

Colombo (News 1st)
உள்நாட்டுச் செய்திகள்

01. துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் அந்நாட்டு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

02. எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

03. ஐக்கிய தேசியக் கட்சிக்கான புதிய தொகுதி அமைப்பாளர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

04. சித்திரவதைக்கு உள்ளாக்கி தனது மகளை கொலை செய்த தந்தைக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

05. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நிறைவுசெய்வதற்கான அதிகாரம் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்திற்கு இல்லை என தெரிவித்து தாக்கல் செய்த அடிப்படை எதிர்ப்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

வௌிநாட்டுச் செய்திகள்

01. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திருக்குறளுக்கு முன்னாள் இந்திய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றுமொரு திருக்குறளால் பதில் வழங்கியுள்ளார்.

02. இஸ்ரேலிய இராணுவத்தால் காஸா எல்லையில் மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்கள் அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்