சிறு மற்றும் மத்தியதர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நிவாரணம்

சிறு மற்றும் மத்தியதர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நிவாரணம்

சிறு மற்றும் மத்தியதர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நிவாரணம்

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2019 | 8:37 am

Colombo (News 1st) சிறு மற்றும் மத்தியதர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பத்திரம் இன்று (12) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறு மற்றும் மத்தியதர அரிசி ஆலை உரிமையாளர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடியபோது ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள அபெகம வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சிறு மற்றும் மத்திய தர அரிசி ஆலை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வறுமையிலுள்ள மக்களை முன்னேற்றுவதற்கு விரிவான செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்