கொழும்பின் சில இடங்களில் 21 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில இடங்களில் 21 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில இடங்களில் 21 மணித்தியால நீர்வெட்டு

எழுத்தாளர் Staff Writer

12 Feb, 2019 | 6:52 am

Colombo (News 1st) கொழும்பின் சில இடங்களில், நாளை (13) காலை 8 மணிமுதல் நாளை மறுதினம் மாலை 5 மணிவரையான 21 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய மற்றும் ரெக்மல்கம உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், பெலேன்வத்த, மத்தேகொட, ​ஹோமாகம, மீபே மற்றும் பாதுக்க உள்ளிட்ட இடங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அவசர திருத்தப் பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்