அரசியல் களத்தில் விஜய் ஆண்டனி

அரசியல் களத்தில் விஜய் ஆண்டனி

அரசியல் களத்தில் விஜய் ஆண்டனி

எழுத்தாளர் Bella Dalima

12 Feb, 2019 | 5:12 pm

அடுத்தடுத்து படங்களில் பிசியாகி வரும் விஜய் ஆண்டனி, தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

திமிரு புடிச்சவன் படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்ததாக `கொலைகாரன்’ படம் வௌியாக இருக்கிறது. விஜய் ஆண்டனி தற்போது, `அக்னிச் சிறகுகள்’, `தமிழரசன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”எனது அடுத்த படத்தில் மெட்ரோ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனுடன் இணைவதில் மகிழ்ச்சி. டி.டி.ராஜா இந்த படத்தை தயாரிக்கிறார்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த படம் அரசியல் படமாக உருவாகிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக எமன் படத்தில் விஜய் ஆண்டனி அரசியல்வாதியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்