மாதிவெலயில் அங்கொட லொக்காவின் உதவியாளர் கைது

மாதிவெலயில் அங்கொட லொக்காவின் உதவியாளர் கைது

by Staff Writer 11-02-2019 | 6:07 PM
Colombo (News 1st) மாதிவெல பகுதியில், பிரபல பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களுள் ஒருவரான 'அங்கொட லொக்கா' என்பவரின் உதவியாளர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வலான குற்றத்தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபரிடமிருந்து 40 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். காரொன்றில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டபோது அங்கொட பகுதியைச் சேர்ந்த 39 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மேலதிக விசாரணைக்காக மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.