எரிபொருள் விலையில் மாற்றம்?

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு

by Staff Writer 11-02-2019 | 10:34 PM
Colombo (News 1st) எரிபொருள் விலை இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சு அறிவித்துள்ளது. எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு ஏற்ப, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 6 ரூபாவினாலும் ஒக்டேய்ன் 95 ரக பெற்றோல் 5 ரூபாவினாலும் ஒட்டோ டீசல் 4 ரூபாவினாலும் சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய விலை சூத்திரத்திற்கு அமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 129 ரூபாவாகவும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் 152 ரூபாவாகவும் ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 103 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 8 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது 126 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், எரிபொருள் விலை அதிகரித்தாலும், பஸ், முச்சக்கரவண்டி உள்ளிட்ட ஏனைய சேவைகளுக்கான கட்டணங்களை அதிகரிப்பதற்கான தேவையில்லை என, நிதி அமைச்சு அறிக்கை ஒன்றினூடாக அறிவித்துள்ளது.