கோட்டாபயவின் அடிப்படை எதிர்ப்பு மனு நிராகரிப்பு

கோட்டாபயவின் அடிப்படை எதிர்ப்பு மனு நிராகரிப்பு

by Fazlullah Mubarak 11-02-2019 | 2:02 PM

Colombo (News 1st) முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நிறைவுசெய்வதற்கான அதிகாரம் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்திற்கு இல்லை என தெரிவித்து தாக்கல் செய்த அடிப்படை எதிர்ப்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸவின் சட்டத்தரணிகளால் இந்த எதிர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த எதிர் மனு மீதான ஆட்சேபனையை அடுத்து மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தால் இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மெதமுல்லன பகுதியிலுள்ள டீ.ஏ. ராஜபக்ஸ அருங்காட்சியகத்தின் நிர்மாணப் பணிகளுக்காக, அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பிரதிவாதிகளுக்கு எதிராக விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.