by Staff Writer 11-02-2019 | 7:12 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சிக்கான புதிய தொகுதி அமைப்பாளர்கள் 6 பேர் இன்று (11) நியமிக்கப்பட்டுள்ளனர்.
அலரிமாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வின்போது புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கையளித்துள்ளார்.
நீர்கொழும்பு தொகுதி அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
தம்பதெனிய தொகுதி அமைப்பாளராக பிரபல பாடகர் ரூகாந்த குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.