பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் சாரதிக்கு விளக்கமறியல்

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் சாரதிக்கு விளக்கமறியல்

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் சாரதிக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

11 Feb, 2019 | 8:46 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியின் சாரதியை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பண்டாரவளையில் நேற்று நடைபெற்ற மோதல் ஒன்று தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் சாரதிக்கு இடையில் நேற்று மாலை 6.30 மணியளவில் மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின்போது, காயமடைந்த போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் தற்போது பண்டாரவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தமக்கு தாக்கல் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்து, சமிந்த விஜேசிறியின் சாரதியும் தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்