பலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் கொடூரம் தொடர்கின்றது

பலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் கொடூரம் தொடர்கின்றது

பலஸ்தீனுக்கு எதிரான இஸ்ரேலின் கொடூரம் தொடர்கின்றது

எழுத்தாளர் Fazlullah Mubarak

11 Feb, 2019 | 8:53 am

Colombo (News 1st) இஸ்ரேலிய இராணுவத்தால் பலஸ்தீனின் – காஸா எல்லையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்கள் அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், சிறுவர்கள், பெண்கள் என பலரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காஸா எல்லையில் இஸ்ரேலிய இராணுவத்திற்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையிலான மோதல் உக்கிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலினால் கடந்த வெள்ளிக்கிழமை பலஸ்தீனின் 14 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்ட சம்பவம் பதிவாகியிருந்தது.

பலஸ்தீனத்தின் சுகாதார அமைச்சினால் ஹசன் ஷாலிபி என அந்த சிறுவன் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

எல்லை வேலிக்கு அருகே தாம் பதிலடி கொடுத்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்திருந்தது.

எனினும், இந்த பிண்ணணியிலேயே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதத்திலிருந்து காஸா எல்லையில், 220 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் எதிர்ப்புக்களில் கொல்லப்பட்டதாக அந்த மாகாண சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்போது ஒரு இஸ்ரேலிய இராணுவ சிப்பாய் உயிரிழந்திருந்தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இஸ்ரேல் இதுவரை எவ்வித நிலைப்பாட்டையும் வெளியிடவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்