சனிக்கிழமைக்கான செய்திச் சுருக்கம்

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

by Chandrasekaram Chandravadani 10-02-2019 | 6:27 AM
Colombo (News 1st) உள்நாட்டுச் செய்திகள் 01. இவ்வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் எனவும் அதற்கு முன்னர் அரசியலமைப்பிலுள்ள சட்ட சிக்கல்களைத் தீர்த்து மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 02. ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்படுகின்ற கால அவகாசமானது இலங்கை அரசாங்கத்திற்கு நன்மையாக அமையுமே தவிர, தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப்போவதில்லை என சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார். 03. அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஒரே நாளில் 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 04. பாதாள உலகத் தலைவர் மாகந்துரே மதூஷுடன் தொடர்புவைத்திருந்த பெண் ஒருவருடையது என கூறப்படும் காரொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. வௌிநாட்டுச் செய்திகள் 01. தாய்லாந்தின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் அந்நாட்டின் இளவரசி போட்டியிடுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என அந்நாட்டு மன்னர் வஜிரலங்கோர்ன் தடை விதித்துள்ளார். 02. வெனிசூலாவில் மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளமையினால், 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். விளையாட்டுச் செய்தி 01. பிரேஸிலின் ஃப்ளமிங்கோ கால்பந்து பயிற்சிக்கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.