மழையினால் கொலன்ன, பனாமுரயில் மின்சாரம் தடை

கொலன்ன, பனாமுர பகுதியில் தடைப்பட்ட மின்சார விநியோகத்தை சீர்செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

by Staff Writer 10-02-2019 | 10:02 AM
Colombo (News 1st) கொலன்னா மற்றும் பனாமுர பகுதியில் தடைப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று பெய்த கடும் மழையினால் குறித்த பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஸன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். மழை பெய்த சந்தர்ப்பத்தில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பனாமுர பகுதியில், முறிந்து வீழ்ந்த மரங்கள் அகற்றப்பட்டதுடன், மின்சார விநியோகம் சீராக்கப்பட்டதாகவும் சுலக்ஸன ஜயவர்தன தெரிவித்துள்ளார். எனினும், கொலன்ன மற்றும் பனாமுரவுக்கு இடைப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது. இன்று முற்பகல் வேளைக்குள் மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் சுலக்ஸன ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.