by Bella Dalima 09-02-2019 | 9:15 PM
Colombo (News 1st) இவ்வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் எனவும், அதற்கு முன்னர் அரசியலமைப்பிலுள்ள சட்ட சிக்கல்களைத் தீர்த்து மாகாண சபைத் தேர்தலை நடத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை இலக்காகக் கொண்டே மறுசீரமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டிலேயே அவர் இவ்விடயத்தைக் கூறினார்.
இம்மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது.