சிலாபம் பஸ்கள் அனைத்தும் பணிப்பகிஷ்கரிப்பு

சிலாபத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களும் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 09-02-2019 | 5:03 PM
Colombo (News 1st) சிலாபத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன. சிலாபம் - நீர்கொழும்பு பஸ் ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து பஸ்களும் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளன. தனியார் பஸ்ஸொன்றின் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிலாபம் - குருநாகல், சிலாபம் - புத்தளம், சிலாபம் - கொழும்பு உள்ளிட்ட 10 வீதிகளில் ​சேவையில் ஈடுபடும் பஸ் ஊழியர்கள் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்டின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இது தொடர்பில் சிலாபம் பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியொருவரிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. பஸ் ஊழியர் தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.