இந்த வருடத்திலிருந்து துரித பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம்: பிரதமர்

by Bella Dalima 09-02-2019 | 9:50 PM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலிக்கு சென்றிருந்தார். காலி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான 99 குப்பை சேகரிக்கும் இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு பிரதமரின் தலைமையில் இடம்பெற்றது. காலி மாவட்டத்தின் உடற்பயிற்சிக்கூடம் பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் தேசிய அரசாங்கத்தின் தேவை தொடர்பில் பிரதமர் தௌிவூட்டினார். இதேவேளை, வெவபிரி சிறி அசிறி திட்டத்தின் கீழ் குருநாகல் நகரில் நிர்மாணிக்கப்பட்ட நடைபாதை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று (08) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது, நாட்டின் கடன் சுமை தொடர்பில் பிரதமர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,
கடன் பெற்று மூக்கு வரைக்கும் கடன் சுமை வந்திருந்தது. 2013 ஆம் ஆண்டளவில் பாரிய சிக்கல் நிலைமை இருந்தது. 2014 ஆம் ஆண்டளவில் இந்த சிக்கலைத் தீர்க்க முடியும் என யாரும் நினைக்கவில்லை. ஆனால், 2015 இல் அதில் கை வைத்து அதனை தீர்க்க நாங்கள் ஆரம்பித்தோம். தற்பொழுது மீண்டு வருமானத்தினை ஈட்டி கடனை செலுத்த வேண்டிய நிலைதான் இருக்கின்றது. இந்த வருடத்திலிருந்து துரித பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். 2030 ஆகும் பொழுது கடனை செலுத்தி முடிக்க வேண்டும்.