இந்திய - இலங்கை உறவு தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவில் உரை

by Staff Writer 09-02-2019 | 9:26 PM
Colombo (News 1st) இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, இந்தியாவின் 'த ஹிந்து' பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த மாநாடொன்றில் உரையாற்றினார். இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான எதிர்கால உறவுகளை அடிப்படையாகக் கொண்டு அவர் அங்கு உரை நிகழ்த்தினார். இந்தியாவின் பெங்களூரில் இன்று ஆரம்பமான இந்த மாநாடு நாளை நிறைவுபெறவுள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்ட சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.