பிளாட்டினம் விருதுகள்: களுத்துறை மாவட்டத்தின் அதிசிறந்த வீரராக அவிஷ்க லக்ஷான் தெரிவு

பிளாட்டினம் விருதுகள்: களுத்துறை மாவட்டத்தின் அதிசிறந்த வீரராக அவிஷ்க லக்ஷான் தெரிவு

எழுத்தாளர் Staff Writer

09 Feb, 2019 | 9:59 pm

Colombo (News 1st) ஸ்போர்ட்ஸ்ட் ஃபெஸ்ட் – Allianz பிளாட்டினம் விருது வழங்கல் விழாவின் நம்பிக்கையின் சுடர் வாகனத் தொடரணி இன்று கொழும்பு மாவட்டத்தை வந்தடைந்தது.

இன்றைய ஊக்குவிப்பு செயற்திட்டம் களுத்துறையில் கண்கவரும் விதத்தில் முன்னெடுக்கப்பட்டது.

கடந்த இரண்டு வருடங்களில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான போட்டிகளில் ஆற்றல்களை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகளை வாழ்த்தி கௌரவிக்கும் பொருட்டு, Allianz நிறுவனத்துடன் இணைந்து ஸ்போர்ட்ஸ் ஃபெஸ்ட் இந்த ஊக்குவிப்பு செயற்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தின் பாடசாலை மட்ட வீரருக்கான தங்கப்பதக்கத்தை களுத்துறை வித்தியாலயத்தின் கிரிக்கெட் வீரரான அவிஷ்க லக்ஷான் சுவீகரித்தார்.

நம்பிக்கையின் சுடர் வாகனத் தொடரணி மக்களின் உற்சாகமான வாழ்த்துகளுக்கு மத்தியில் ஹோமாகம நகரை அடைந்தது.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்