சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்

எழுத்தாளர் Staff Writer

09 Feb, 2019 | 5:18 pm

Colombo (News 1st) சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 150 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், வடமேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீட்டர் வரையான மழை பெய்யக்கூடும்.

இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மொனராகலை மாவட்டத்திலேயே அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மொனராகலை – வெல்லவாய பகுதியில் 88 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் தெனனகல பகுதியில் 82.4 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், பதுளை மாவட்டத்தின் பொனகல தோட்டத்தில் 75 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்