ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு

விமான நிறுவன முறைகேடு: ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு 

by Staff Writer 08-02-2019 | 4:07 PM
Colombo (News 1st)  ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வௌியிடப்பட்டுள்ளது. குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் பதவிக்காலம் நிறைவடையவிருந்தது. ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கா விமான சேவை ஆகிய நிறுவனங்களில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதியில் இருந்து 2018 ஜனவரி 30 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.