மக்களவைத் தேர்தலில் கூட்டணியின்றி தனித்துப் போட்டி: கமல் ஹாசன் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் கூட்டணியின்றி தனித்துப் போட்டி: கமல் ஹாசன் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலில் கூட்டணியின்றி தனித்துப் போட்டி: கமல் ஹாசன் அறிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

08 Feb, 2019 | 4:30 pm

மக்களவைத் தேர்தலில் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடவுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய மக்களவைக்கான தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களையே நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாமும் குறித்த தேர்தலில் போட்டியிடவுள்ளதுடன், எந்தத் தொகுதியில் களமிறங்குவதென்பதை இன்னமும் தீர்மானிக்கவில்லையென நடிகர் கமல் ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்