30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளரின்றி நடைபெறும் ஒஸ்கார் விழா

30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளரின்றி நடைபெறும் ஒஸ்கார் விழா

30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளரின்றி நடைபெறும் ஒஸ்கார் விழா

எழுத்தாளர் Bella Dalima

07 Feb, 2019 | 4:14 pm

30 ஆண்டுகளுக்கு பிறகு 91 ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹொலிவுட் திரையுலகின் கௌரவமிக்க விருதாக கருதப்படுவது, ஒஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கும் 91 ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் 24 ஆம் திகதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.

யாரெல்லாம் ஒஸ்கார் விருது பெறுகிறார்கள் என்கின்ற எதிர்பார்ப்பை போல், இந்த விழாவை தொகுத்து வழங்குவது யார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும். அந்த வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை இந்தியாவை சேர்ந்த பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கினார். இந்த ஆண்டிற்கான ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை பிரபல நடிகர் கெவின் ஹார்ட் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ஓரின சேர்க்கையாளர் தொடர்பாக அவர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், தான் ஒஸ்கார் விருதுகளை தொகுத்து வழங்கப்போவதில்லை என கெவின் ஹார்ட் அறிவித்தார்.

இந்த நிலையில், 91 ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை ஒளிபரப்பும் ‘ABC’ நிறுவனம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இல்லாமல் ஒஸ்கார் விருதுகள் வழங்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்