விசாரணைகளை துரிதமாக்குவது குறித்து கலந்துரையாடல்

வழக்கு விசாரணைகளை துரிதகதியில் முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடல்

by Staff Writer 07-02-2019 | 10:31 AM
Colombo (News 1st) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை அநாவசிய தாமதங்களைத் தவிர்த்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி இன்று காலை விசேட பேச்சுவார்த்தை ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சேவையாற்றும் அனைத்து மேல் நீதிமன்ற நீதிபதிகள், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கொழும்பு மேல் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தொடரப்பட்டுள்ள வழக்குகளை துரிதகதியில் விசாரித்து நிறைவுசெய்யுமாறு தலைமை நீதிபதி நளின் பெரேரா முன்வைத்த ஆலோசனைக்கு இணங்க, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆரச்சி, இந்த விசேட கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.