பிலிப்பைன்ஸை ஆக்கிரமிக்கும் தட்டம்மை நோய்

பிலிப்பைன்ஸை ஆக்கிரமிக்கும் தட்டம்மை நோய்

by Staff Writer 07-02-2019 | 1:50 PM
Colombo (News 1st) பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் தட்டம்மை தொற்றுநோய் தீவிரமாக பரவி வருகின்றது. கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 196 பேர் தட்டம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் 20 பேர் மாத்திரமே தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில், இது பாரிய அதிகரிப்பாக காணப்படுகின்றது. இந்த தொற்றுநோயினால் சிறுவர்கள் உள்ளிட்ட 50 பேர் உயிரிழந்துள்ளனர் என நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, தடுப்பூசி ஏற்றப்படாத 2.4 மில்லியன் சிறுவர்கள் நோய்த் தொற்று அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக, அதிகாரிகள் முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.