களுத்துறை பிரதேச சபை முன்னாள் தலைவருக்கு  சிறை

களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை

by Staff Writer 07-02-2019 | 5:05 PM
Colombo (News 1st) இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லக்ஷ்மன் விதானபத்திரனவிற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு களுத்துறை பகுதியிலுள்ள காணியொன்றின் ஊடாக வீதியொன்றை அமைப்பதற்காக ஒருவரிடம் 30 இலட்சம் ரூபா பெற்றதாக பிரதிவாதிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத்தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க சிறைத்தண்டனை விதித்துள்ளார். சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக அவர் இலஞ்சமாகப் பெற்ற 30 இலட்சம் ரூபாவை அபராதமாக அறவிடுமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனைத் தவிர, 20 இலட்சம் ரூபாவை முறைப்பாட்டாளருக்கு செலுத்துமாறு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் சுமத்தப்பட்டிருந்த நான்கு குற்றச்சாட்டுகளுக்காகவும் தலா 5000 ரூபா வீதம் 20,000 ரூபா அபராதத்தையும் செலுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.