உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய 65,000 பேர் விண்ணப்பம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய 65,000 பேர் விண்ணப்பம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய 65,000 பேர் விண்ணப்பம்

எழுத்தாளர் Staff Writer

07 Feb, 2019 | 3:31 pm

Colombo (News 1st) 2018 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்காக 65,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜனவரி மாதம் 16 ஆம் திகதி வரையில் மீளாய்விற்காக விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ. பூஜித்த தெரிவித்தார்.

பெறுபேறுகளை மீளாய்வு செய்யும் நடவடிக்கை அடுத்த வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் நடைபெற்ற உயர் தர பரீட்சையில் 7,21,469 பேர் தோற்றியிருந்தனர்.

இதில் 1,60, 907 பேர் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர்.

இதேவேளை, 119 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்