by Staff Writer 06-02-2019 | 7:29 PM
Colombo (News 1st) வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல்காரர் தொடர்பில் தகவல் வழங்கிய மாணவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்து, வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவுக்கு எதிராக இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வட மாகாண அலுவலகத்தில் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.