மத்திய மாகாண அரசசேவை ஆணைக்குழு கலைப்பு

மத்திய மாகாண அரசசேவை ஆணைக்குழு கலைப்பு

by Staff Writer 06-02-2019 | 7:35 AM
Colombo (News 1st) மத்திய மாகாண அரசசேவை ஆணைக்குழு உடன் அமுலுக்கு வரும் வகையில் கலைக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் மத்திய மாகாண அரசசேவை ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார். மத்திய மாகாண அரசசேவை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவேண்டிய வைத்தியசாலை சேவைகள் மற்றும் பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தம்புள்ளை வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் இல்லாததமையால், 12 சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க முடியாதுள்ளதாகவும் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, மத்திய மாகாண அரசசேவை ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்படவேண்டிய சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், நிர்வாக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவிற்கான புதிய உறுப்பினர்களை நியமிக்கும் பணிகள் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் முன்னெடுக்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்