போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு: தேசிய அதிகாரசபையை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 06-02-2019 | 1:04 PM
Colombo (News 1st) போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான தேசிய அதிகாரசபையை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இதற்கான பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இதனைத்தவிர, போதைப்பொருளை அடையாளங்காணும் நவீன உபகரணங்களை இறக்குமதி செய்து பயன்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. போதைப்பொருளற்ற நாடு, போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு இணையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஊழல் ஒழிப்பிற்கான ​தேசிய செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இதனடிப்படையில், 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டிற்குள் இந்த செயற்றிட்டம் நமைுறைப்படுத்தப்படவுள்ளது. அரச நிறுவனங்கள் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களில் இடம்பெறும் ஊழலை ஒழிப்பதே இதன் நோக்கமாகும்.

ஏனைய செய்திகள்