தேசிய அரசாங்கத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ எதிர்ப்பு

தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணைக்கு மஹிந்த ராஜபக்ஸ எதிர்ப்பு

by Staff Writer 06-02-2019 | 5:28 PM
Colombo (News 1st) தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணையை தாம் எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். இன்று இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தமது தரப்பினர் குறித்த பிரேரணைக்கு எதிர்ப்பு வௌியிட்டதாக அவர் கூறினார். ஆளுங்கட்சியின் தீர்மானத்திற்கு இணங்க நாளை குறித்த பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், அது அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் நடவடிக்கையாக அமையும் என  மஹிந்த ராஜபக்ஸ மேலும் தெரிவித்தார். சலுகைகளை அதிகரித்துக்கொள்ளும் நோக்குடன் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையே இதுவெனவும் அவர் தெரிவித்தார்.