வெனிசூலா விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்கலாம் – பாப்பரசர்

வெனிசூலா விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்கலாம் – பாப்பரசர்

வெனிசூலா விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்கலாம் – பாப்பரசர்

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2019 | 8:48 am

Colombo (News 1st) இரு தரப்பும் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் வெனிசூலா விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்க முடியும் என, பாப்பரசர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

இருதரப்பும் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் வத்திக்கான் நடுநிலை வகித்து செயற்பட தயாராகவுள்ளதுடன் இருதரப்பின் விடயதானங்களையும் உன்னிப்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பாப்பரசர் பிரான்ஸிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அபுதாபியிலிருந்து தனது விமானத்தில் திரும்பிய பாப்பரசரிடம் ஊடகவியலாளர்கள் வினவியபோது, வெனிசூலாவின் ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ தனக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளதாகவும் எனினும் இதுவரை கடிதத்தை வாசிக்கவில்லை எனவும் கூறிய பாப்பரசர், குறித்த கடிதத்தை வாசித்ததன் பின்னர் என்ன செய்யமுடியும் என்பதைப் பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளுக்கு வத்திக்கான் ஆதரவு வழங்குவதாகவும் வெனிசூலா விடயத்தில் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பாப்பரசர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்