ரசிகர்கள் மேல் குதித்த ரன்வீர் சிங்: சமூக ஊடகங்களில் கண்டனம்

ரசிகர்கள் மேல் குதித்த ரன்வீர் சிங்: சமூக ஊடகங்களில் கண்டனம்

ரசிகர்கள் மேல் குதித்த ரன்வீர் சிங்: சமூக ஊடகங்களில் கண்டனம்

எழுத்தாளர் Bella Dalima

06 Feb, 2019 | 5:10 pm

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உற்சாக மிகுதி காரணமாக ரசிகர்கள் மீது குதித்ததில் சிலர் காயமடைந்துள்ளனர்.

ரன்வீர் சிங், அலியா பட் நடிப்பில் ‘கல்லி பாய்’ என்ற திரைப்படம் பெப்ரவரி 14 ஆம் திகதி வெளிவரவுள்ளது.

இந்த திரைப்படத்தை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகளில் ரன்வீர் சிங் பங்கேற்று வருகிறார்.

அந்த வகையில், நிகழ்ச்சி ஒன்றில் ரசிகர்கள் தன்னை ஏந்திக்கொள்ளும்படி உற்சாகமாகக் குதித்துள்ளார். இதில் சில ரசிகர்கள் காயமடைந்ததாக மும்பை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரன்வீர் சிங்கின் இந்தச் செயலை சமூக ஊடகங்களில் பலரும் கண்டித்துள்ளனர்.


எங்கள் வலைத்தள்த்தில் அல்லது வீடியொ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்