ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தள, அனுராதபுர மாவட்டங்களுக்கான புதிய அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தள, அனுராதபுர மாவட்டங்களுக்கான புதிய அமைப்பாளர்கள் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தள, அனுராதபுர மாவட்டங்களுக்கான புதிய அமைப்பாளர்கள் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

06 Feb, 2019 | 1:17 pm

Colombo (News 1st) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தள மாவட்டத்திற்கான புதிய தலைவர் மற்றும் அனுராதபுர மாவட்டத்திற்கான புதிய தொகுதி அமைப்பாளர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய அமைப்பாளர்களுக்கான கடிதங்கள் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியினால் நேற்று வழங்கிவைக்கப்பட்டன.

இந்தவகையில்,

* புத்தள மாவட்ட தலைவர் – தயாஶ்ரீத்த திசேரா

* கலாவெவ தொகுதி அமைப்பாளர் – துமிந்த திசாநாயக்க

* ஹொரவப்பொத்தான அமைப்பாளர் – வீரகுமார திசாநாயக்க

* மெதவாச்சி தொகுதிக்கான அமைப்பாளர் – திஸ்ஸ கரலியத்த

* அனுராதபுர மேற்குதொகுதிக்கான அமைப்பாளர் – டபிள்யூ.பி. ஏக்கநாயக்க

* மிஹிந்தலைக்கான தொகுதி அமைப்பாளர் – டபிள்யூ.கே. இலங்கசிங்க

* அனுராதபுரம் கிழக்கு தொகுதிக்கான அமைப்பாளர் – பிரேமசிறி ஹெட்டியாரச்சி, டீ.பி. பந்துசேன

* கெக்கிராவை தொகுதி அமைப்பாளர் – ரோஹான் ஜயக்கொடி

ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனுராதபுர மாவட்டத்திற்கான புதிய மாவட்ட அமைப்பாளர்களாக – .பீ.பி. திசாநாயக்க, எம். ஹேரத் பண்டா, எம்.ஆர்.பீ. ஞானதிலக்க ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்