P.S.M.சார்ள்ஸ் 3 மாதங்களுக்கு கடமையாற்ற அனுமதி

P.S.M. சார்ள்ஸ் மேலும் 3 மாதங்களுக்கு சுங்கப் பணிப்பாளராக கடமையாற்ற அமைச்சரவை அனுமதி 

by Staff Writer 05-02-2019 | 5:22 PM
Colombo (News 1st) சுங்கப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய P.S.M. சார்ள்ஸை மீண்டும் மூன்று மாதங்களுக்கு அந்த பதவியில் அமர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று பிற்பகல் கூடிய அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. P.S.M. சார்ள்ஸ் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் சுங்க தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. நியாயமான காரணங்களை முன்வைக்காது அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியிருந்தன. இதேவேளை, பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் M.R. லத்தீஃபிற்கு ஒரு வருட சேவை நீடிப்பை வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான பிரேரணையை ஜனாதிபதி முன்வைத்திருந்தார்.