அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றுக்கு ஈராக் கண்டனம்

அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றுக்கு ஈராக் கண்டனம்

by Staff Writer 05-02-2019 | 9:00 AM
Colombo (News 1st) ஈரானின் நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக அமெரிக்க பாதுகாப்புப் படை முகாம் அமைக்க வேண்டும் என்ற அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றை ஈராக் கண்டித்துள்ளது. ஈரானின் நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக அமெரிக்க பாதுகாப்புப் படை முகாம் அமைக்க எண்ணியுள்ளதாக, அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் ஊடகம் ஒன்றிற்குத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஈராக்கிய ஜனாதிபதி பர்ஹாம் சாலே (Barham Saleh), அமெரிக்க ஜனாதிபதியின் கூற்றைக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளார். குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா, ஈராக்கிடம் அனுமதி ஏதும் கோரவில்லை எனவும் பர்ஹாம் சாலே குறிப்பிட்டுள்ளார். ஈராக்கில் சுமார் 5,000 அமெரிக்கப் படையினர் நிலை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.