போதைப்பொருள் கடத்தல்காரர் மாகந்துரே மதுஷ் கைது

போதைப்பொருள் கடத்தல்காரர் மாகந்துரே மதுஷ் கைது

எழுத்தாளர் Staff Writer

05 Feb, 2019 | 1:34 pm

Colombo (News 1st) பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகக் கோஷ்டித் தலைவருமான மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட 25 பேர் துபாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஐவர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் எனவும் அவர்களில் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கஞ்சி பானை இம்றான், கெசல்வத்தே தினுக்க உள்ளிட்டவர்களும் இதில் அடங்குவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையின் பிரபல பாடகரும் இவர்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்