பிளட்டினம் விருது வழங்கல் விழா இரத்தினபுரியில் முன்னெடுப்பு
by Staff Writer 05-02-2019 | 1:19 PM
Colombo (News 1st) ஸ்போட்ஸ் பெஸ்ட் - அலியான்ஸ் பிளட்டினம் விருது வழங்கல் விழாவின் இன்றைய ஊக்குவிப்பு செயற்றிட்டம் இரத்தினபுரியில் முன்னெடுக்கப்பட்டது.
2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தேசிய ரீதியில் பிரகாசித்த வீர, வீராங்கனைகளை வாழ்த்தி கௌரவிக்கும் பொருட்டு ஸ்போட்ஸ் பெஸ்ட் இந்த ஊக்குவிப்பு செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது.
25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் நடத்தப்படும் ஊக்குவிப்பு செயற்றிட்டம் இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய ஊக்குவிப்பு செயற்றிட்டத்தில் கல்வித்திணைக்கள அதிகாரிகள், வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மஹாராஜா மற்றும் அலியான்ஸ் நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும் இதன்போது, பாடசாலை மாணவர்களுக்கு றக்பி, பேஸ்போல், கால்பந்தாட்டம் உள்ளிட்ட விளையாட்டுக்களின் நுணுக்கங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன.
இந்நிலையில், இரத்தினபுரி சுமனா மகளிர் கல்லூரியின் மெய்வல்லுநர் வீராங்கனையான புபுதினி ரங்கிக்கா தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
எம்பிலிபிட்டிய மத்திய மகா வித்தியாலயத்தின் லஹிரு கேஷான் வெள்ளிப்பதக்கத்தையும் இரத்தினபுரி சுமனா மகளிர் கல்லூரியின் லிஹினி ஹபுஹராய்ச்சி வெண்கலப் பதக்கத்தையும் வெற்றிகொண்டனர்.
அதன்பின்னர், நம்பிக்கையின் சுடர் வாகனத்தொடரணி திஸ்ஸமஹாராமை நோக்கி பயணமானது.