டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறை வீரர்களின் நிரல்படுத்தலில் ஜேசன் ஹோல்டர் முதலிடம்

டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறை வீரர்களின் நிரல்படுத்தலில் ஜேசன் ஹோல்டர் முதலிடம்

டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறை வீரர்களின் நிரல்படுத்தலில் ஜேசன் ஹோல்டர் முதலிடம்

எழுத்தாளர் Bella Dalima

05 Feb, 2019 | 4:25 pm

டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறை வீரர்களின் நிரல்படுத்தலில் மேற்கிந்தியத்தீவுகள் அணித்தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான சகலதுறை வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கான புதிய நிரல்படுத்தலை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டது.

முதலிடத்திற்கு முன்னேறியுள்ள ஜேசன் ஹோல்டர் 448 புள்ளிகளை ஈட்டியுள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஹேசன் ஹோல்டர் இரட்டைச்சதம் விளாசியதோடு, இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் 7 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தார்.

இதனிடையே, டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான புதிய தரவரிசையில் அவுஸ்திரேலியாவின் பெட் கம்மிங்ஸ் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிராக நேற்று (04) நிறைவுக்கு வந்த ஷேன் வோர்ன் – முரளிதரன் வெற்றிக்கிண்ணத்தில் வெளிப்படுத்திய ஆற்றல்களுக்கு அமையவே இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்.

இந்தத் தொடரின் இரண்டு போட்டிகளிலும் பெட் கம்மிங்ஸ் மொத்தமாக 12 விக்கெட்களை வீழ்த்தி தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதினையும் சுவீகரித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்