கிரலாகல தூபி மீதேறி நிழற்படம் எடுத்த மாணவர்களுக்கு தலா 50,000 ரூபா அபராதம்

கிரலாகல தூபி மீதேறி நிழற்படம் எடுத்த மாணவர்களுக்கு தலா 50,000 ரூபா அபராதம்

கிரலாகல தூபி மீதேறி நிழற்படம் எடுத்த மாணவர்களுக்கு தலா 50,000 ரூபா அபராதம்

எழுத்தாளர் Staff Writer

05 Feb, 2019 | 3:57 pm

Colombo (News 1st) ஹொரவப்பொத்தானை – கிரலாகல தூபி மீதேறி நிழற்படம் எடுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த 8 மாணவர்களும் தலா 50,000 ரூபா தண்டப்பணம் விதித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் கெப்பித்திகொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் இறுதி வருடத்தில் கல்வி பயிலும் மாணவர்களாவர்.

மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் ஹொரவப்பொத்தான பொலிஸார் சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

இதில் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு 1000 ரூபா அடிப்படையில் அரசுக்கு பணம் செலுத்துமாறு சந்தேகநபர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏனைய குற்றச்சாட்டுகளுக்காக தலா 50,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்