by Fazlullah Mubarak 04-02-2019 | 2:24 PM
71 ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என, கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தரவினை மீறி திறக்கப்படும் மதுபானசாலைகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் இன்று நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் என திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் பிரதி பணிப்பாளர் கபல குமாரசிங்க கூறியுள்ளார்.
அனுமதிப் பத்திரமின்றி, இரகசியமாக மதுபானங்களை விற்பனை செய்தல் தொடர்பிலும், தமது திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.